டெங்கு குறித்து தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் வெறும் ஊசியின் மூலம் சிகிச்சை அளிக்க கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த அவர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை மேம்படுத்த அறிவுறுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் , டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் ஊசியின் மூலம் சிகிச்சை அளித்து நோயாளிகளை வீட்டிற்கு அனுப்ப கூடாது என எச்சரித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் வந்தால் ஊசி போட்டு ஒரே நாளில் காய்ச்சலை சரி செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.