Breaking News
பா.ஜ.க.வின் இரக்கத்தினால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை; கேரள முதல் மந்திரி

கேரளாவிற்கு ஒரு நாள் பயணமாக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று வந்தார். கண்ணூரில் கட்சி அலுவலக திறப்பு விழாவிலும், திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்கலாவில் சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குருவின் 90-வது மகாசமாதி தின நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.
அதன்பின் அவர் தொண்டர்கள் முன் பேசும்பொழுது, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைவதை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பக்தர்களுக்கு எதிராக போலீஸ் படையை மாநில கம்யூனிஸ்டு அரசு பயன்படுத்துகிறது.

போராட்டத்தை ஒடுக்கும் செயலில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் அதற்காக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

பினராயி அரசு தொடர்ந்து அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டால் ஆட்சியை இழக்க நேரிடும்.

கம்யூனிஸ்டு அரசு சபரிமலை கோவிலையும், இந்து பாரம்பரியத்தையும் அழிக்க முயற்சி செய்கிறது. இந்துக்களின் நம்பிக்கையில் விளையாடுவதை பா.ஜனதா ஒருபோதும் அனுமதிக்காது என கூறினார்.

இந்த நிலையில், கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசானது பாரதீய ஜனதா கட்சியின் இரக்கத்தினால் ஆட்சிக்கு வரவில்லை. கேரள மக்களின் ஆதரவினால் அதிகாரத்திற்கு வந்துள்ளோம் என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி செயல்படுகிறோம் என்பதற்காக ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசை மிரட்ட அக்கட்சியின் தலைவர் துணிந்துள்ளார்

அரசியலமைப்பு அளித்த அடிப்படை உரிமைகளை காக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக எங்களது அரசு அச்சுறுத்தப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.