காஞ்சிபுரம் திருவள்ளூர் சேலம் நாகப்பட்டினத்தில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஊழலை ஒழிப்போம்
புதிய இந்தியாவை அமைப்போம் என்பதைக் குறித்து கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் காஞ்சிபுரம் நகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் டிஎஸ்பி சிவ பாத சேகர் தலைமை தாங்கினார் இன்ஸ்பெக்டர்கள் கணேசன் தமிழரசி சிவகாமி மணிமேகலை உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் அனைத்து செயல்களிலும் நேர்மையையும் சட்டவிதிகளையும் பின்பற்றுவேன் அனைத்து செயல்களிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வேன் என்றும் தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த உறுதிமொழியில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாராயணன் திட்ட இயக்குனர் ஜெயக்குமார் பிற்பட்டோர் நல அதிகாரி மாலா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டு ஊழலை ஒழிப்போம் புதிய இந்தியாவை அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்ட் சந்தோஷ் அதிமானி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு ஊழல் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
திருவள்ளூரில் நடந்த கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
சேலத்தில் சேலத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு குறித்து உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுகுமார் சிட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் சேலம் மண்டல நகராட்சி இயக்குனர் அலுவலகத்தில் லட்சுமி தலைமையில் லஞ்சத்தை ஒழிப்போம் நேர்மையுடன் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
நாகப்பட்டினத்தில் நடந்த ஊழலை ஒழிப்போம் குறித்து உறுதிமொழி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்