டெல்லியில் பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே சந்திப்பு
இந்திய – இத்தாலிதொழில்நுட்ப உச்சிமா நாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி பிரதமர் க்யூசெப்பே கோன்டே டெல்லி வந்தார். டெல்லி வந்த அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் 2018-ஆம் ஆண்டு இந்திய – இத்தாலி தொழில்நுட்ப உச்சிமா நாட்டில் இத்தாலிய பிரதமர் தலைமையிலான குழு பங்கேற்கிறது.
இந்த உச்சி மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள், சுகாதாரம், விண்வெளி ஆய்வு, கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை முக்கிய இடம் பெறுகின்றன.
இந்தியா வந்த இத்தாலி பிரதமர் கோன்டே, பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தையிலும் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.