Breaking News
அசாமில் 5 பேர் சுட்டுக்கொலை, ராணுவ நடவடிக்கை தீவிரம்

அசாமில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் நேற்று மாலை 7 மணியளவில் பொதுமக்கள் 5 பேரை சுட்டுக்கொல்லப்பட்டனர். உல்பா பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை முன்னெடுத்து இருக்கலாம் என்று சந்தேகப்படப்படுகிறது. ஆனால், உல்பா இயக்கம் தாக்குதல் நடத்தவில்லை என மறுத்துள்ளது. தலைநகர் கவுகாத்தியில் இருந்து 500 கி.மீட்டர் தொலைவில் உள்ள தின்சுகியா பகுதிக்கு உடனடியாக அசாம் காவல்துறை தலைவர் குல்தார் சைகியா மற்றும் பிற உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அசாம் அருணாச்சல பிரதேச எல்லையில், மிகப்பெரும் தேடுதல் வேட்டையை ராணுவம் முடுக்கி விட்டுள்ளது. இந்தோ- மியான்மர் எல்லையிலும் அசாம் ரைபிள் படைப்பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதற்கு, கண்டனம் தெரிவித்து சில பெங்காலி அமைப்புகள் 12 மணி நேர பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஊர்வலம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அசாமில் அரசுக்கு எதிராக போராடும் உல்பா இயக்கம், பிற மாநிலத்தவர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.