பிராணிகளை பாதுகாப்பது பற்றி அனுஷ்கா சர்மா
பிராணிகளை துன்புறுத்துவதை கண்டித்து வருகிறார். அவற்றுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபடுகிறார்.
இப்போது இன்னொரு முயற்சியாக பிராணிகள் பாதுகாப்பு மையம் ஒன்றை உருவாக்குகிறார். மும்பை நகரை விட்டு வெளியே இதற்காக 6 ஏக்கர் நிலம் வாங்கி இந்த மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வெளிநாடுகளில் இதுபோன்ற மையங்கள் இருப்பதை நேரில் சென்று பார்த்து அதுமாதிரி வடிவமைத்து கட்டுகிறார். கட்டுமான பணிகள் ஜரூராக நடக்கிறது.இதுகுறித்து அனுஷ்கா சர்மா கூறும்போது, ‘‘பிராணிகள் பாதுகாப்பு மையம் அமைப்பது எனது நீண்ட கால கனவு. அதை நிறைவேற்றுவதற்கு எனது முழு உழைப்பையும் கொடுக்கிறேன். வயதான பிராணிகளும் காயம் அடைந்த விலங்குகளும் கவனிப்பார் இல்லாமல் சாலையோரங்களில் உயிருக்கு போராடுவதை பார்த்து இருக்கிறேன்.
வாயில்லாத ஜீவன்களை வளர்ப்பவர்கள் கூட வயதானதும் அவற்றை வளர்க்க முடியாது என்று எங்கேயாவது கொண்டு போட்டு விட்டு வந்து விடுகிறார்கள். அந்த சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன. அதனால்தான் இந்த மையத்தை தொடங்குகிறேன். மனிதனுக்கு வாழ்க்கையில் எவ்வளவு பற்றுதல் இருக்குமோ, அதே அளவு பிராணிகளுக்கும் இருக்கும். இது புத்த மத தலைவர் தலாய்லாமா சொன்னது’’ என்றார்.