பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டாம்: நியூ கலிடோனியா முடிவு
நியூ கலிடோனியா, பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பு முடிவில், 56.9 சதவீத வாக்குகள் பிரான்ஸிடம் இருந்து விடுதலை வேண்டாம் என்று விழுந்துள்ளதாக முதற்கட்ட செய்திகள் கூறுகின்றன. இதன் காரணமாக பிரான்சிடமிருந்து விடுதலை கோரிய பிரிவினையாளர்களின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
பிரான்சிடம் இருந்து 1800 கி.மீட்டர் தொலைவில் உள்ள நியூ கலிடோனியா, தீவுப்பகுதியாகும். இந்த நியூ கலிடோனியாவில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கு தேவையான நிக்கல் திரளாக கிடைக்கிறது. பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இந்தப் பகுதியை மிக முக்கிய பகுதியாக பிரான்ஸ் அரசு கருதுகிறது.