தல தீபாவளி கொண்டாடிய நயன்தாரா!
நடிகை நயன்தாரா தன் காதலருடன் நெருக்கமானவர்களுக்கு தீபாவளி விருந்து அளித்தார். தென்னிந்திய நடிகைகளில் உச்சத்தில் உள்ளவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிப்பதாக உலா வரும் செய்திகளுக்கு, இதுவரை நேரடியாக பதில் சொல்வதில்லை. ஆனால், அவர் பதிவிடும் டுவிட்டர் படங்களே இருவருக்குமான நெருக்கத்தை ஆமோதிக்கும் வகையில் இருக்கும். ஒவ்வொரு பண்டிகை மற்றும் இருவரின் பிறந்தநாளுக்கு வெளிநாட்டிலோ அல்லது அவரவர் வீட்டிலோ இருவர் மட்டுமே கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு தீபாவளியை இருவரும் சேர்ந்து மட்டுமின்றி, இயக்குனர் அட்லீ, சிவகார்த்திகேயன், அனிருத், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி என தங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டுமே அழைத்து விருந்து கொடுத்துள்ளனர். அப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்றியும் உள்ளார். படத்தை பார்த்த நெட்டீசன்கள், ‛தல தீபாவளி கொண்டாட்டமா?’ என, கேள்வி எழுப்பியுள்ளனர்.