Breaking News
தனுஷை இயக்கும் மாரி செல்வராஜ்

நடிகர் தனுஷ் அடுத்ததாக கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்க இருக்கிறார்.

இந்தாண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அள்விலேயே இருக்கும். அதில் பரியேறும் பெருமாள் முக்கியமான படம். தமிழக மக்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்ட அந்தப்படம். தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ரிலிசாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்தியன் பனோரமா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட இருக்கிறது.

பரியேறும் பெருமாளின் ஏகோபித்த வெற்றி மாரி செல்வராஜை கோலிவுட்டின் முக்கியமான இயக்குனராக்கியுள்ளது. தற்போது அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கும் அந்தப் படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.