Breaking News
மியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்

ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

7 லட்சத்துக்கும் மேற்பட்ட அந்த இன மக்கள், அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற சிறப்புக்குரிய சூ கி (வயது 73), அந்த நாட்டின் அதிகாரமிக்க தலைவராக இருந்தபோதும், ரோஹிங்யா இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்கவில்லை. இது சர்வதேச அளவில் அவருக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஆம்னஸ்டி இன்டர்நே‌ஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது.

இது அந்த அமைப்பின் உயர்ந்த கவுரவம் ஆகும்.

ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்க சூ கி தவறி விட்டார் என்ற காரணத்துக்காகத்தான் அவருக்கு அளித்த கவுரவத்தை ஆம்னஸ்டி இன்டர்நே‌ஷனல் அமைப்பு பறித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.