கொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் – தீபிகா திருமணம்
பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங்குக்கு இத்தாலியில் கொங்கனி பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தீபீகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. தென்னிந்திய கலாச்சார முறைப்படி காலை 7 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் தீபிகா கழுத்தில் ரன்வீர் தாலி கட்டினார். இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். தீபிகா-ரன்வீர் திருமணத்தில் மொத்தம் 40 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரன்வீர்-தீபிகா திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கசியக் கூடாது என்பதற்காக , திருமணத்துக்கு வந்தவர்களின் செல்போன்களின் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
திருமணம் நடக்கும் இடம் ஏரி ஓரத்தில் இருப்பதால் படகில் பாதுகாப்புக்கு ஆட்களை நிறுத்தி உள்ளனர். திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
திருமண பரிசுகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக இருவரும் அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.