டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்த ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸின் வழக்கறிஞர் கைது
அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச பட நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
ஸ்ட்ரோமி டேனியல்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது, கடந்த 2006-ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான உறவு இருந்ததாக கூறினார். மேலும் அவர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி மீதான இந்த குற்றச்சாட்டிற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது குறித்து பேசுவதை ஸ்ட்ரோமி நிறுத்தவில்லை.
ஸ்ட்ரோமியின் சார்பாக மைக்கேல் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடுத்தவர் ஆவார்.
செவ்வாய்க்கிழமை மைக்கேலுக்கும், அவரிடமிருந்து பிரிந்த மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், அவரின் மனைவிக்கு காயங்கள் மற்றும் வீக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவியின் புகாரால் மைக்கேல் கைது செய்யப்பட்டார்.
பொழுதுபோக்கு செய்தி ஊடகமான டிஎம்இசட் தான் இந்த கைது குறித்து புதன்கிழமை முதல்முதலாக செய்தி வெளியிட்டது.