சென்னையில் கடந்த சில வருடங்களாகவே அட்டுழியம் செய்துகொண்டிருந்த போலிபத்திரிக்கையாளர்கள்
நீதிமன்றங்களும் காவல்துறையும் ஆட்சியாளர்களும் ஊடக சங்கங்களும் என்ன கிழித்துக்கொண்டிருக்கின்றது? சென்னையில் கடந்த சில வருடங்களாகவே அட்டுழியம் செய்துகொண்டிருந்த போலிபத்திரிக்கையாளர்களுடன் தற்போது யூட்யூப் சானல் என்று மொபைல் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு மாலைமர் ,தந்தி,ஆங்கில ஹிந்து பேப்பரில் வரும் இன்றைய நிகழ்ச்சிகள்,திருமணங்கள்,கடை திறப்புவிழா,கல்லூரிவிழா,பள்ளிவிழா மட்டுமல்ல மஞ்சள் நீராட்டுவிழா உட்பட நான்கு சேர் ஒரு ட்யூப்லைட்போட்டு ஒரு நிகழ்ச்சி என்றாலே 50க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் என்று குவிந்து விடுகின்றனர்.இன்னும் சொல்லபோனால் புற்றீசல்போல் யூடியூப் செல்போன் ரிப்போர்ட்டர்கள் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் போன்று லோகோபோட்டு மைக்நீட்டுகின்றனர் சிலர் தந்தி பத்திரிக்கையின் டிடிநெக்ஸ்ட் போன்று டிடி நியூஸ் என்று சில இடங்களில் தினத்தந்திகுரூப் என்றே சொல்வதாகவும் தகவல்கள் வருகின்றது.இவர்களின் நோக்கம்நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் பணம் பறிப்பது மட்டுமே கடைசியில் பிச்சை எடுப்பதுபோல் கெஞ்சிகேட்டாவது பணம் வாங்கிசெல்கின்றனர்,பேப்பரில் போடாத நிகழ்ச்சிகளை தவிர போஸ்டரில் பார்த்து கோவில்கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல இடங்களில் 50க்கும்மேற்ப்ப்ட்டவர்கள் மிரட்டும் தோரணையில் பணம் கேட்கின்றனர்.இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்டகும்பல் சென்னையில் சுற்றிவருகின்றது.இவர்களுக்கு சில அமைச்சர்களே தங்களைப்பற்றி எதாவது செய்தி போட்டுவிடுவார்கள் என்று தலைமைச்செயலகத்திலேயே 100,200 என்று சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கின்ற கொடுமையும் நடக்கின்றது.இதனை தொலைக்காட்சி,அச்சு ஊடக செய்தியாளர்களும் கண்டுகொள்வதில்லை அவர்களிடம் கேட்டால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் காவல் துறையினரை கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு நிற்காது என்றும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு நூற்றுக்கணக்கில் குற்றவாளிகளை உறுவாக்கிவிட்டுள்ளனர். இதில் திருமண விழாக்களில் ரூ1 லட்சம் வரை இவர்களுக்கு கொடுத்து ஏமாந்தவர்களே பல ஆயிரக்கணக்கானவர்களைத்தாண்டும்.பல பேர் குழு குழு வாகவந்து தலைமைச்செயலக ரிப்போர்ட்டர் என்று சொல்லிதான் பணமே கேட்பார்கள் யுட்யூப் சானலை டிவி என்று சொல்லி பணம் பறிக்கும் கும்பல் சென்னையில் சர்வசாதாரணமாக 200பேருக்கு மேல் பத்திரிக்கையாளர்கள் என்றே உலாவருகின்றனர்.இவர்கள் பண்டிகை சமயத்தில் ஓபன்னீர்செல்வம் வீட்டில் மொத்தமாக குவிவார்கள் அவரும் பணம் கொடுத்து சளைக்காமல் அனுப்புகின்றார்.கடை திறந்த அன்று காலையில் இருந்து மதியம் வரை விருந்தினர்கள் வருகின்றார்களோ இல்லையோ பத்திரிக்கையாளர்கள் படையெடுப்பு நூற்றுக்கணக்கில் தொடர்கின்றது.பள்ளி,கல்லூரி நிகழ்ச்சி மட்டுமல்ல அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் திருமணம்,மற்றும் பிறந்தநாள் அன்று பெரும்படையே அங்கு இருக்கும் காரில்வருபவர்களிடம் பிச்சை எடுப்பதுபோன்று பிச்சை எடுப்பார்கள்.சிலர் தினத்தந்தி,மாலைமலர்,மாலைமுரசு என்று சொல்வார்கள் இதற்க்கு ஒரு சீனியர் மாலை பத்திரிக்கையாளரே துணைபோவார்.சிலர் பிரபல தொலைக்காட்சி என்று சொல்லி பணம் வாங்கும் படலம் பல ஆண்டுகளாக தொடர்கின்றது. அமைச்சர்கள் பலரிடம் இவர்கள் பெரிய ஊடகவியலாளர்கள் போன்று தொலைபேசியிலே பேசுவதும் உண்டாம் தீபாவளி தினத்தன்று திருவள்ளூர் மாவட்ட அமைச்சரிடம் போன்செய்துவிட்டு ஒரூவர் 15க்கும் மேற்பட்டவர்களை குழுபோல் அழைத்துசென்றிருக்கின்றார் அவர் 10 வருடங்களுக்குமுன்பு சில மாதங்கள் பத்திரிக்கையில் வேலைசெய்துமுறைகேடால் துரத்தப்பட்டவராம் அவர் தற்போதுவரை கடந்த 10 வருடங்களாக பத்திரிக்கையாளர் போல் வலம் வருகின்றார் அவருக்கு துணையாக சிலரை சேர்த்துக்கொண்டு பாதுகாப்புக்காக குழுவை நடத்திக்கொண்டுவருகின்றார் இன்னமும்.சிலர் பல வருடங்களுக்கு முன்பு பத்திரிக்கை நடத்திவிட்டு இன்னமும் வாய்ஸ்,டைம்ஸ் என்று பணம் வாங்கிவருகின்றனர்.அதில் சில பெயர்கள் மக்கள் நாணயம்,தொழில்வணிகம்,இந்தியாவாய்ஸ்,தமிழ்மலர்,தினமதி,மக்கள்வெளிச்சம்,டிடி நியூஸ்,எஸ் எல் எஸ் டிவி,யுகம் டிவி,எம்ஜிஆர்டிவி,ஸ்டார் நியூஸ்(இவர் ஸ்டார் டிவி என்றே சொல்வதாக செய்தி இவரிடம் பெரம்பூர் எம் எல் ஏ வெற்றிவேலே ஏமாந்துள்ளார்)தொகுதி நியூஸ்,எஸ் டிவி,தமிழ்செய்தி,தமிழ்நாடு டிவி(இவர் மினிஸ்டர்களையே மிரட்டுகின்றாராம் குறிப்பாக சுகாதாரத்துறை விஜய்பாஸ்கர்),தினப்பார்வை என்ற பத்திரிக்கையின் உரிமையாளர் சென்னையிலேயே 100க்கும் மேற்பட்டோருக்கு 100 ரூபாய்வாங்கிக்கொண்டு அடையாள அட்டையை போட்டுக்கொடுத்துள்ளார்.சிந்தாரிப்பேட்டையை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் பல போலி பத்திரிக்கையாளர்களை வைத்துக்கொண்டு சம்பாதிக்கின்றாறாம் இவருக்கு சென்னை சூளைமேட்டை சார்ந்த் சதீஷ் என்பவர் எஸ் எல் எஸ் டிவி(இவரும் ய்டூப் சானல்தான்) என்பவர் தொலைக்காட்சிபோல் மைக்கேமரா வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது போலும்,சிலசமயங்களில் மிரட்டும் தோரணையிலும் பணம் கேட்பாராம்.இவர்களுக்கு இந்த திருட்டு தொழிலை சொல்லிக்கொடுத்து உடன் இருப்பவர் சூளைமேட்டை சார்ந்த அசோகன் என்பவர்.இவர்களைவிட இன்னும் சிலபேர் மாரிமுத்து என்பவர் எழுதபடிக்க தெரியாத சிலரையும் வைத்துக்கொண்டு வெறும் திருமணங்களை குறிவைத்து பாய்வாராம் இவர் இத்தைனைக்கும் தொழில்வணிகம் என்னும் பத்திரிக்கையை நடத்திவந்தவர்.சிலர் சென்னையில் மாலைநேர ரவுண்ட்ஸ் என்கிற பெயரில் வசூல் வேட்டையை நடத்திவந்துள்ளனர்.தற்போது சென்னையில் பல இடங்களில் இவர்களுக்கு கவனிப்பு? வந்ததால் இவர்கள் நிறுத்திவிட்டு தவிப்பதாக தகவல் மேலும் துரை தமிழன்,சூரன்,எழில்,செந்தில்,சேகர்,மாரிமுத்து,அசோகன்,ஆண்ட்ரூஸ்,சதீஷ்,மோகன்,அஸ்வின், உள்ளிட்டோர்களைவிட பாலாஜி என்பவர் ஒரு மிகப்பெரிய கொள்ளைக்கூட்டகும்பலையே தயார் படுத்திக்கொண்டுள்ளாராம்.தற்போதுவரை 50 பேரை இவர் இ எம் ஐல் செல்போன் வாங்கிக்கொடுத்து இறக்கிவிட்டுள்ளாராம் 50பேர்களை கும்பலாக அணுப்பிவிட்டு மாலையில் கமிஷன் வாங்குகின்றாராம்.இவர் ஆன்லைன் மீடியா சங்கம் என்கிறபெயரில் அமைச்சரையே சந்திக்கின்றாராம்.இவரிடம் உள்ளவர்கள் தினமும் பிச்சை எடுப்பதுபோல் எடுத்து இவரிடம் சமர்ப்பிக்கின்றார்களாம். ராஜ்குமார் என்பவன் யுட்யூப் சானல் கில்லாடியாம் பிரஸ் மீட்டுக்கு சென்று உயர்தர சாப்பாடு சாப்பிடும் பழக்கமுடையவனாம் அசோகன் என்பவன் அவன் ப்ளேட் கொடுக்கும்வரை லாபியில் இருப்பானாம்.பி ஆர் ஓக்களை மிரட்டுவானாம்.பாலாஜி என்பவன் டெல்லிக்கு சென்று நான் சுஷ்மா சுவராஜ்ஜிடம் அனுமதி வாங்கி வந்துவிட்டேன் என்று சொல்லி சங்கத்துக்க்ன்று பணம் கலக்ஷன் செய்கின்றானாம்.அசோகன்,பாலாஜி,மாரிமுத்து கோஷ்டி போன்று தற்போது பல குழுக்கள் சென்னையில் திருமணமண்டங்கள் அல்ல மதுரவாயல்,பூந்தமல்லி,தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்டபங்கள் விழாக்கள் போஸ்டர் செய்திகள் அரசியல் நிகழ்ச்சிகள் என்று நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 3000 ரூபாய் முதல் 5000ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் ஹோட்டல் திறப்புவிழா,மருத்துவமணை திறப்புவிழா,முகாம் போன்ற அனைத்திலும் போலி ஊடககும்பல் குழுகுழுவாக ஒரு நாளைக்கு சில லட்சங்களை பிடுங்கிச்செல்கின்றது இதனை மறுநாள் செய்திதாளில் வராமல் ஏமாந்தவர்கள் ஊடகம் என்பதால் புகாரும் கொடுப்பதில்லை இது இவர்களுக்கு மிக வசதியாக போய்விடுகின்றது எனவே பல நபர்களிடம் பல லட்சம் தினமும் ஒரு மூலையில் பணம் பிடுங்கப்பட்டு வருகின்றது இதுகுறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றமும்,காவல்துறையும்,அரசும்,நீதித்துறையும் தாமாகமுன்வந்து நடவடிக்கை எடுத்தால் ஒழிய இதை தடுக்கமுடியாது எடுக்குமா செயல் இழந்த நான்கும்