ஈரானில் கடும் நிலநடுக்கம்; 170 பேர் காயம்
ஈராக் எல்லையை ஒட்டிய மேற்கு ஈரானில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவானது.
இந்நிலநடுக்கம் ஏற்படுத்திய அதிர்வினால் பொதுமக்கள் அலறியபடி சாலைகளில் ஓடினர். இதில் 171 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
நிலநடுக்கம் நின்றபின் 6 மீட்பு குழுக்கள் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கின. அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலநடுக்கம் ஈரானின் கெர்மன்ஷா மாகாணத்தில் சர்போல் இ ஜஹாப் பகுதியருகே ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 600 பேர் பலியாகினர். இதில் பாதிக்கப்பட்ட சிலர் இன்னும் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர்.