சேலத்தில் லஞ்சத்தில் மூழ்கடித்த மாநகராட்சி பெண் அதிகாரி கைது…
தமிழகத்தில் லஞ்சம் வாங்குவதில் முதலிடம் பெற்ற அரசு அலுவலகங்கள் எது என்றால் சேலம் மாநகராட்சி முதலிடம் என்று சொல்லலாம். இங்கு மாநகராட்சி கமிஷனராக பொறுப்பு வகிப்பவர் சதீஷ் இவர் இதற்கு முன்பு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவராக பணியாற்றியவர் என்பது குரிப்பிடதக்கது. இவர் சேலம் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றதிலிருந்து நகரமைப்பு, பிரிவு, என்ஜீனியரிங் பிரிவு, சுகாதார பிரிவு ஆகிய பிரிவுகளில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக பொதுமக்கள் மேடை போட்டு பேசாத குறையாக வாயில் அடித்து கொண்டு குற்ற சாட்டு வசிக்கின்றனர். சமீபத்தில் சேலம் கொண்டலாம் பட்டி பகுதியை சேர்ந்த முத்து சாமியின் மகன் அரசு என்பவர் தனது தாய் மனை ஒன்றை தான செட்டில்மெண்டாக கொடுத்தாரம்.
இதற்கான பத்திரத்தை எடுத்துக்கொண்டு மாநகராட்சியில் உள்ள நகரமைப்பு பிரிவு செயற் பொறியாளர் கலைவானியை பார்த்து எங்க அம்மா கொடுத்த இடத்திற்கு அனுமதி வேண்டும் என கேட்டாராம். அவரோ அந்த சீட்ல உஸ்மான் என்பவர் இருக்காரு, அவர்கிட்ட ரூ.5000 கொடுத்துவிட்டு அனுமதி வாங்கிக்கோ, என தெனாவட்டாக கூறினாரம்.லஞ்சம் கொடுக்க விரும்பாத அரசு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரை அனுகினார். அவர் கொடுத்த ஆலோசனை படி ரூ. 5000 நோட்டுகளில் இரசாயணபவுடர் தூவப்பட்டது. அதன் பின்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் கலைவானியை மறைந்திருந்து பிடித்தனர்.
அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் நகரமைப்பு பிரிவில் விசாரிக்கும் போது கலைவானி மாநகராட்சியை 3-ஆக கூறுபோட்டு, 3 புரோக்கர்களை நியமித்துள்ளார். இதில் சூப்பர் ஸ்டாரகா கே.டி உஸ்மானும், மெகாஸ்டாராக பிராடு திருநாவுக்கரசும், நட்சத்திர ஹீரோ ஜகஜாலக் கேடி ஜெயசங்கர் ஆகியோரை தனது பர்சனல் புரோக்கர்களாக நியமித்து கொண்டு மனைகளுக்கு ஏற்றார் போல் தலா ரூ.5000 முதல் ரூ.15,000 வரை வசூலித்து தனது கஜானவை நிரப்பியுள்ளார் கலைவானி. அனுமதி பிரிவுக்காக வரும் பொதுமக்களிடம், மரியாதை குறைவாக வாட போடா என்றுதான் பேசுவாராம். கலைவானி தனது வீட்டில் உள்ள பாரை இரவு 11.00 மணிக்கு ஓப்பன் செய்து விட்டால், ராயல் ஸ்காட்ச் என்ற வெளிநாட்டு மதுபானத்தை சுவைத்து அருந்துவாரம். அப்போது, சைட்டிஸ்சாக மேலை நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட 1 கிலோ முந்திரியை 1 ஆசையாக தின்று தீர்ப்பாரம்.
இதுவரை 4,500 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களிடமிருந்து கலைவானி பல கோடி ரூபாய்யை ஏப்பம் விட்டுள்ளாராம். இந்த விவகாரத்தில் மாநகராட்சி கமிஷனர், சதிஸ்க்கும் தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.