மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக 17 ஆம் தேதி பதவியேற்கிறார் கமல்நாத்
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.
புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் எம.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேச மாநில புதிய முதல்-மந்திரியாக முறைப்படி முன்னாள் மத்திய மந்திரி கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார். அவர் வரும் 17 ஆம் தேதி (திங்கள் கிழமை) பதவியேற்க உள்ளார். போபாலில் உள்ள லால் பராட் மைதானத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.