நன்கொடை வழங்கியதில் முகேஷ் அம்பானி தாராளம்
ல்வி, வாழ்வாதாரம், இயற்கை இடர்ப்பாடு போன்றவற்றுக்கு, தாராளமாக நன்கொடை வழங்கியோரில், ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துஉள்ளார்.ஹூருன் ஆய்வு மையம், 2017 அக்., 1 முதல், 2018, செப்., 30 வரை, நன்கொடை அளித்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பெரும்பான்மையானோர், கல்விக்கு நன்கொடை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த வகையில், 3.45 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள, முகேஷ் அம்பானி, கல்விக்காக, 437 கோடி ரூபாய் நன்கொடை அளித்து, முதலிடத்தில் உள்ளார்.
அடுத்த இடத்தில், ‘பிரமல் என்டர்பிரைசஸ்’ நிறுவன தலைவர், அஜய் பிரமால், 200 கோடி ரூபாய் கல்விக்காக வழங்கியுள்ளார்; இவர் சொத்து மதிப்பு, 30 ஆயிரம் கோடி ரூபாய்.மூன்றாவது இடத்தில் உள்ள, ‘விப்ரோ’ தலைவர், அசீம் பிரேம்ஜி. 200 கோடி ரூபாய் கல்விக்காக வழங்கியுள்ளார்.’கோத்ரெஜ்’ குழும தலைவர், ஆதி கோத்ரெஜ், மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு, 96 கோடி ரூபாய் அளித்துள்ளார்; இவர் சொத்து மதிப்பு, 19 ஆயிரம் கோடி ரூபாய்.’லுாலுா’ குழும தலைவர், யூசுப் அலியின் சொத்து மதிப்பு, 33 ஆயிரம் கோடி ரூபாய். இவர், இயற்கை இடர்பாடு நிவாரண நிதியாக, 70 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனர், ஷிவ் நாடார், கல்விக்காக, 56 கோடி ரூபாய் அளித்துள்ளார்; இவர் சொத்து மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்.அடுத்த இடங்களில், ‘ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனர், சவ்ஜி தோலாக்யா, ஷபூர்ஜி பலோன்ஜி மிஸ்திரி, சைரஸ் மிஸ்திரி, கவுதம் அதானி ஆகியோர், முறையே, 40 கோடி, 36 கோடி மற்றும் 36 கோடி ரூபாய், கல்விக்காக நன்கொடை வழங்கியுள்ளனர்.