மாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்
இந்த ஆண்டு மாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய இந்திய நகரங்களாக பாட்னா, கான்பூர், வாரணாசி உள்ளன.
கான்பூர் ஐஐடி.,யும், சக்தி பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து இந்தியாவில் மாசுபாடு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில், காற்று மாசு பாட்டில் தலைநகர் டில்லியை மிஞ்சும் அளவிற்கு மாசுபாடுடைய நகரங்களாக பாட்னா, கான்பூர், வாரணாசி ஆகியன உள்ளது தெரிய வந்துள்ளது. அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான 31 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நகரங்களில் 170 பிஎம் (micrograms per cubic metre) ஆக மாசுபாடு துகள்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.
மாசுபாடு நிறைந்த நகரங்களின் பட்டியலில் தற்போது டில்லி 4 வது இடத்திலேயே உள்ளது. 5 வது இடத்தில் ஜெய்பூர் உள்ளது. காற்று மாசுபாட்டில் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் மாசுபாடு குறைவாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை, வாகன புகை, மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் தூசுகள் உள்ளிட்டவைகள் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
மாசுபாடு, பருவநிலை மாற்றம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதால் காற்று மாசுபாடு குறித்து இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என சர்வதேச நிபுணர்கள் சிலரும் அறிவுரை வழங்கி உள்ளனர். மக்கள்தொகை அதிகம் உள்ளதும் இந்த டாப் 5 நகரங்களில் மாசுபாடு அதிகரிப்பிற்கு முக்கியம் காரணம் எனவும் கூறப்படுகிறது.