அரசின் மூலதன செலவு கணக்கு: துரைமுருகன் கிண்டலால் சட்டசபையில் சிரிப்பலை
தமிழக அரசின் மூலதன செலவு பற்றி தி.மு.க. முன்வைத்திருந்த சில கருத்துகளுக்கு பதிலளித்த அவர் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இருந்த மூலதன செலவை பட்டியலிட்டு பேசினார்.
அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் (தி.மு.க.) குறுக்கிட்டுப் பேசினார்.
“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இருந்த அதே நிதித்துறை செயலாளர்தான் இப்போது உங்களுக்கும் எழுதித் தந்திருக்கிறார். எனவே அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் உங்களுக்கு என்ன எழுதித் தந்திருக்கிறார் என்பதை இப்போது தெரிந்துகொண்டோம்” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
மேலும், “நான் எதிர்பார்ப்பதெல்லாம், அவை நிகழ்ச்சிகள் முடிவுற்றன என்ற சபாநாயகரின் அறிவிப்பைத்தான்” என்று அவர் கூறினார். அதைத் தொடர்ந்து அவையில் பலத்த சிரிப்பலை எழுந்தது.