குல்பூசன் ஜாதவ் வழக்கு 18-ம் தேதி விசாரணை
குல்பூசன் ஜாதவ் வழக்கில் விசாரணை சர்வதேச கோர்ட்டில் 18-ம் தேதி துவங்குகிறது.
இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூசன் ஜாதவை,47 உளவு பார்த்ததாக கூறி கடந்த 2016ம் ஆண்டு பலுசிஸ்தானில் பாக்., கைது செய்தது. அவருக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டில் 2017-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த தி ஹேக்நகரில் உள்ள சர்வதேச கோர்ட், ஜாதவ் மரண தண்டனைக்கு தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இருநாடுகளும் தங்கள் தரப்பு எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய சர்வதேச கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 18-ம் தேதி துவங்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.