அதிகரித்து வரும் வெப்பநிலை
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதி வரை நிலவி வந்த வளிமண் டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந் துவிட்டது. அடுத்து வரும் நாட் களில் கிழக்கு திசைக் காற்று மிதமான அளவிலேயே வீச வாய்ப்புள்ளது. இதன் காரண மாக தமிழகத்தில் வெப்பம் அதி கரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தி மற்றும் பாளையங் கோட்டையில் தலா 36 டிகிரி செல்சியஸ் மற்றும் சேலம், திருத்தணி, நாமக்கல், மதுரை ஆகிய இடங்களில் தலா 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.