ஒரு கோடி பேருடன் பேச உள்ளார் பிரதமர் மோடி
வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் வரும் 28ம் தேதி பா.ஜ., ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசனை நடத்த உள்ளார் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பா.ஜ., ஆதரவாளர்களுடன், வரும், 28ல், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். ”இந்த பேச்சு, உலகளவில், வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடத்தப்பட்ட, மிகப்பெரும் கலந்தாலோசனை நிகழ்வாக இருக்கும்,” என, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா கூறினார்.
நாடு முழுவதும், 15 ஆயிரம் இடங்களில், ஒரு கோடி பேரிடம், வீடியோ கான்பரன்ஸ் முறையில், மோடி பேச உள்ளதாக, அமித் ஷா தெரிவித்தார். ‘நமோ ஆப்’ மூலம், தங்கள் கேள்விகளை, மக்கள் அனுப்பலாம் என்றும், அவர் தெரிவித்தார்.