Breaking News
கிம் உடனான சந்திப்பு அருமையாக இருந்தது: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு வியட்நாமில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடக்கும் உச்சிமாநாட்டில் நேற்றைய தினம் கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் இரவு விருந்தின்போது சந்தித்து பேசினார்கள்.

இரண்டாவது தினமான இன்று இரு நாட்டு தலைவர்கள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மேலும் இரு தலைவர்களும் பத்திரிகையாளர்களை சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பில் ஈடுபடுவதற்கான திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை நடந்த சந்திப்பில் செய்தியாளர்கள் சுருக்கமான கேள்விகள் கேட்கவே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசினார்கள்.

நேற்று இரவு விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க பாதுகாப்பு செயலர் மைக் பாம்பியோ மற்றும் கிம்மின் மூத்த ஆலோசகர் கிம் யாங் – சோல் ஆகியோர் உடனிருந்தனர்.

கிம்முடனான சந்திப்புக்கு பிறகு டிரம்ப் தனது ட்வீட்டில் ”வியட்நாமில் வடகொரியாவின் கிம் ஜாங் உன் உடனுனான இரவு விருந்தும் சந்திப்பும் அருமையாக இருந்தன. பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதன்கிழமை சந்திப்பின்போது, கொரிய போர் முறைப்படி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, ” பார்க்கலாம்…” என்றார் டிரம்ப்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.