Breaking News
கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரை கைப்பற்றியது இந்தியா

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. ஸ்மிரிதி மந்தனா (66 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), பூனம் ரவுத் (56 ரன்) அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் 7 ரன்னில் கேட்ச் ஆனார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் புருன்ட் 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேனிலி வியாட் 56 ரன்னும், கேப்டன் ஹீதர் நைட் 47 ரன்னும் எடுத்தனர். கேத்ரின் புருன்ட் ஆட்டநாயகி விருதையும், மந்தனா தொடர்நாயகி விருதையும் பெற்றனர். முதல் 2 ஆட்டங்களில் வென்று இருந்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் வருகிற 4-ந் தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.