மதுரையில் தேர்தல் நடத்துவது கஷ்டம்: பின் வாங்கும் போலீஸ்: என்ன காரணம்?
திருவிழா நேரத்தின் போது தேர்தல் நடைபெற்றால் பாதுகாப்பு வழங்குவது கடினம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ந் தேதி தொடங்கி மே 19ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை 2வது கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது மே 23ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 17 மற்றும் 19-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து மதுரைக்கு லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவிற்கு வருகை தருவதால் வாக்களிப்பதில் சிரமம் இருக்கும் ஆகவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவிழாவின் போது தேர்தல் நடத்துவது மிகக்கடினம் எனவும். திருவிழாவிற்கு 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு வழங்கும் நிலையில் அப்போது தேர்தலுக்கான பாதுகாப்பு வழங்குவது மிக கடினம் எனவும் மாவட்ட ஆணையர் டேவிட்சன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விளக்கமளித்துள்ளார்.