அரசு இணையதளங்களில் இருந்து பிரதமர், அமைச்சர்கள் படம் நீக்கம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசு இளையதளங்களில் இருந்து பிரதமர், மத்திய அமைச்சர்களின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மக்களவைக்கு ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அரசு இணையதளங்களில் உள்ள பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் படங்கள் நேற்று நீக்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ தனது அதிகாரங்களை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. அதன்படி பிரதமர், அமைச்சர்களின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் புதிய திட்டங்களையோ, நிதி உதவியையோ அமைச்சர்களோ அல்லது அரசு நிர்வாகங்களோ அறிவிக்க முடியாது. மேலும் பிரச்சாரத்துக்கு அரசு எந்திரங்களைப் பயன்படுத்தவும் கூடாது.
இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலர்கள், அமைச்சரவைச் செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும் இணையதளங்களில் உள்ள அமைச்சர்களின் படங்களை நீக்கவேண்டும் அல்லது மறைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
அதன்படி பிரதமர் அலுவலக இணையதளம் உள்ளிட்ட அனைத்து அரசு இணையதளங்களில் இருந்தும் படங்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில இணையதளங்களில் மட்டும் அமைச்சர்களின் படங்கள் உள்ளன. அவை விரைவில் நீக்கப்படும் என அரசு வட்டாரங்கள்