பெட்ரோல் விலை 9 காசுகள் குறைவு, டீசல் 6 காசுகள் உயர்வு
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 73.79-க்கும், டீசல் 6 காசுகள் அதிகரித்து ரூ 69.72-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று (மே.17) காலை முதல் அமலுக்கு வந்தது.