சுவையான இளநீர் ஆப்பம் ரெசிபி!
சூட்டெரிக்கும் கோடை வெயிலில் இதமாக சாப்பிட விரும்புவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான இளநீர் ஆப்பம். இதை செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகள் ருசி பார்த்து மீண்டும் வேண்டுமென கேட்டு அடம்பிடிப்பார்கள். சுவையான இளநீர் ஆப்பம் ரெசிபி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!!
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா 200 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், இளநீர் – 1, ஈஸ்ட் – ஒரு டீஸ்பூன், பால் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி உளுத்தம்பருப்பை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். இத்துடன் இளநீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.
ஆப்பம் சுடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஈஸ்ட்டை மிதமான பாலில் கலந்து, பத்து நிமிடம் கழித்து மாவுக் கலவையில் சேர்க்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான இளநீர் ஆப்பம் தயார்!!