பாகிஸ்தான் சீக்கிய சிறுமி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாகிஸ்தான் சீக்கிய சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களாக காணவில்லை. இந்த் நிலையில் அவரை வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு லாகூரின் நங்கனா சாஹிப் பகுதியில் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறபட்டது.
இந்த நிலையில் அந்த சிறுமி நேற்று அவரது வீட்டிற்கு வந்து உள்ளார். அவரது குடும்பத்தினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் மற்றும் வீடியோ மேல்முறையீட்டின் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அவர் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு ஆயிஷா என்று பெயரிடப்பட்ட அந்த பெண்ணின் வீடியோவும் வெளிவந்துள்ளது.
பாகிஸ்தானில், இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவ சிறுமிகள் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் உதவி கோரி பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா ஆகியோரிடமும் சீக்கிய குடும்பத்தினர் முறையிட்டு உள்ளனர்.