அரிச்சல்முனை கடலில் ஒரே நேரத்தில் இரண்டு சுழல் காற்று; 15 நிமிடங்கள் நீடித்த அதிசயம்
ராமேசுவரம் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் நேற்று காலை ஒரே நேரத்தில் இரண்டு சுழல் காற்று தோன்றி மறைந்தது.
வெப்ப சலனம் காரணமாகவும், மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாத புரம் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புண்டு என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் நேற்று காலை 9.30 மணி அளவில் கரும் மேகக்கூட்டங் களுக்கு மத்தியில் அருகருகே இரண்டு சுழல்கள் ஒரே நேரத்தில் சுமார் 15 நிமிடங்கள் தோன்றி மறைந்ததாக நேரில் பார்த்த சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரி கள் கூறியதாவது:
கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந் தால், கடலில் சுழல் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படுகிறது. பொது வாகப் பருவநிலை மாற்றம் ஏற்படும்போது சுழல் ஏற்படும், மீண்டும் 2 காற்றுகளின் வெப்பநிலை யும் சமமாக மாறும்போது சுழல் மறைந்து விடும். இந்த அதிசய நிகழ்வின்போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும்.
கடலில் அரிதாக நிகழக்கூடிய இத்தகைய சுழல் நிகழ்வை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், வானியல் ஆய் வாளர்கள் ஆகியோர் காண வாய்ப்பு கள் அதிகம் உண்டு. இதே போன்ற சுழல் காற்று கடந்த ஆண்டு தனுஷ்கோடி மற்றும் பாம்பன் கடல் பகுதியில் தோன்றியது என்றனர்.