ஊழல் ஒழிப்பில் சீன அதிபரை பின்பற்றி 500 பேரை சிறையில் தள்ளுவேன் – இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாள் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீன கவுன்சில் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அங்கு தொழிலதிபர்களிடையே அவர் பேசியதாவது:-
சீன அதிபர் ஜின்பிங்கின் மிகப்பெரிய போர், ஊழலுக்கு எதிரானது ஆகும். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது, ஊழலை எப்படி ஒடுக்கலாம் என்பதுதான். அவர் கடந்த 5 ஆண்டுகளில், மந்திரி அந்தஸ்துள்ள 400 பேரை ஊழல் குற்றத்துக்காக சிறையில் தள்ளி இருப்பதாக கேள்விப்பட்டேன்,
அவரை முன்மாதிரியாக கொண்டு, பாகிஸ்தானில் சுமார் 500 ஊழல்வாதிகளை நான் சிறையில் தள்ள விரும்புகிறேன். அந்த அளவுக்கு பாகிஸ்தானின் முன்னேற்றத்துக்கு ஊழல் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதே சமயம், பாகிஸ்தானில் கோர்ட்டு நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.