தேசிய மக்கள் பதிவு படிவத்தில் பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வியை தவிர்க்கலாம் -மத்திய அரசு
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 மற்றும் தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றில் கணக்கெடுக்கும் போது பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து விவாதிக்க இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் உள்துறை அமைச்சகம் ஒரு நாள் ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருந்தது.
கூட்டத்தில் ஒரு சில மாநிலங்கள் தலைமை செயலாளருக்கு பதிலாக முதன்மை செயலாளர்களால் கலந்து கொண்டனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தைத் தவிர்ப்பதாக அறிவித்திருந்தார், ஆனால் ஒரு அதிகாரி அமர்வில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு பயிற்சிகள் மற்றும் அவற்றின் நன்மைகள் அதில் மொபைல் பயன்பாடு குறித்த விளக்கக்காட்சிகள் கொடுக்கப்பட்டன. மொபைல் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பயன்படுத்தப்படும்.
கூட்டத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் அதிகாரிகள் ஏப்ரல்-செப்டம்பர் மாத மக்கள் தொகை கணக்கெடுப்புப் பயிற்சிக்கு ஒரே நேரத்தில் புதுப்பிக்கப்படவுள்ள உத்தேச தேசிய மக்கள் பதிவேட்டில் (என்.பி.ஆர்) தாய் மற்றும் தந்தை பிறந்த இடம்” என்ற பத்தியை அகற்ற வேண்டும் என இந்திய பதிவாளர் ஜெனரலை கேட்டுகொண்டு உள்ளனர்.
கூட்டத்தில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் பிற உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரதிநிதிகளிடம் பதிலளிப்பவர்கள் விரும்பினால் தேசிய மக்கள் தொகை பதிவு கேள்விகளைத் தவிர்க்கலாம், அவற்றுக்கு பதிலளிப்பது கட்டாயமில்லை என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கம் மற்றும் கேரளா சட்ட ஒழுங்கை பராமரிப்பதை மேற்கோள் காட்டி, இந்திய பதிவாளர் ஜெனரல் கூட்டத்திற்கு முன்பு என்.பி.ஆர் பயிற்சி நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது.
தேசிய மக்கள் பதிவுக்கான விவரங்களை சேகரிக்க யாரும் அழுத்தம் கொடுக்க மாட்டார்கள் என்று உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறினார்.
தேசிய மக்கள் பதிவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியின் போது மக்கள் எந்த ஆவணங்களையும் காட்ட தேவையில்லை. மக்கள் விரும்பும் விவரங்களை கொடுக்கலாம். தேசிய மக்கள் பதிவை குடிமக்களின் தேசிய பதிவேட்டில் இணைக்கக்கூடாது என கூறினார்.