திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை
2011ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக 95 லட்சம் ரூபாய் பணமோசடி செய்து விட்டதாக 16 பேர் புகார் அளித்து இருந்தனர்.
இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2018ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் செந்தில் பாலாஜி முன்ஜாமீனில் இருக்கும் நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில், சென்னை போலீசார் சிறப்பு அனுமதி பெற்று சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, கரூர் ராமேஸ்வரப்பட்டி, ராமகிருஷ்ண புரத்தில் உள்ள வீடுகள் மற்றும் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அலுவலகத்தில் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.