சீனாவுக்கு ‘ஆப்பு’ வைத்த இசையமைப்பாளர்
கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி, லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய-சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். சீனா தரப்பிலும் உயிர் இழப்புகள் ஏற்பட்டது. ஆனால், அதை சீனா அறிவிக்கவில்லை.
இந்த மோதலை தொடர்ந்து, சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. சீன தயாரிப்புகளை இனிமேல் தொடுவதில்லை என்று இளைஞர்கள் சபதம் எடுத்துள்ளனர்.
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ‘டிக் டாக்’ மற்றும் சீன ‘ஆப்’களின் கணக்குகளை டெலிட் செய்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார்.