இந்திய அணிக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணிக்கு ‘டுவிட்டர்’ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணிக்கு ‘டுவிட்டர்’ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘வாழ்க்கையில் மிகவும் கடினமான இந்த கொரோனா தொற்று கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி உலகின் தலைசிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட், 20 ஓவர், மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை தொடர்ச்சியாக வென்று இருப்பது சிறப்பானதாகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.