இந்தியாவின் 2021 பொருளாதார உற்பத்தி 2019 ஆண்டை விட குறைவாகவே இருக்கும் ஆய்வறிக்கை தகவல்
புதுடெல்லி
ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCAP) ஆண்டு ஆய்வறிக்கையை ஐநாவில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சி 2019ம் ஆண்டை விட 2021ம் ஆண்டு குறைவாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனா கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டது மற்றும் 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதம். தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சி நிலைகளை அது தாண்டிவிட்டது. 2021 ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார மீட்சி மேலும் மேம்படும் என்று அது எதிர்பார்க்கிறது.
தொற்றுநோய் காரணமாக, பிராந்தியத்தில் கூடுதலாக 8.9 கோடிமக்கள் மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு நாளைக்கு 1.90 டாலர் (ரூ. 145 க்கும் குறைவாக) வாழ்க்கையை நடத்துவதாக என்று அறிக்கை கூறுகிறது.
1947 முதல் ஆண்டுதோறும் இந்த ஆணையம் ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.இந்தியா, வங்காள தேசம், பூட்டான், ஈரான், ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற 50 க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த ஆய்வு உள்ளடக்கியது.