Breaking News
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உள்பட நான்கு பேர் பலி

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஆரெஞ்ச் நகரில் உள்ள 202 டபிள்யூ. லிங்கன் அவென்யூவில் இரண்டு அடுக்கு வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் குழந்தை உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

போலீசாருடனான துப்பாக்கிச் சூடு மோதலில் காயமடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவரின் நிலைமை குறித்து தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியது யார், எதற்காக என்ற விவரம் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.

அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் நடக்கும் 3வது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.