பச்சை துண்டு போட்டால் விவசாயியா? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி
நாகப்பட்டனம்: விவசாயியை பிடிக்கும். ஆனால், போலி விவசாயியை பிடிக்காது. பச்சை துண்டு போட்டால் விவசாயியா? என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
நாகப்பட்டினம் வேதாரண்யத்தில் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு கொள்கிறது.விவசாயியை பிடிக்கும் போலி விவசாயியை பிடிக்காது.பச்சை துண்டை போட்டால் விவசாயியா? பழனிசாமி விஷவாயு.விவசாயி என்றால், வேளாண் சட்டத்தை ஆதரிப்பார்களா?
டில்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை புரோக்கர் எனக்கூறுகிறார்.புயலால் பாதிக்கப்பட்ட போது சந்திக்காத நீங்கள் விவசாயியா?விவசாயி அல்ல விஷவாயு என்பது தான் உண்மை. அதனால், அவர்களுக்கு பாடம் புகட்ட தயாராக வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கவில்லை. இணையம் துறைமுகம் கொண்டு வருவோம் என பிரதமர் கூறுகிறார். இணையம் துறைமுகம் திட்டத்தை கொண்டு வரவில்லை என முதல்வர் கூறுகிறார். துறைமுகம் விவகாரத்தில் பிரதமர், முதல்வர் மீனவர்களை ஏமாற்றுகின்றனர்.சோதனைக்கு வரும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதுவும் சிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.