ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை
கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி
நாடு முழுவதும் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா பதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 904 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 86 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 92 ஆயிரத்து 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்
நோய் தீவிரம் அதிகம் உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதை தடுக்கவும், தேவையான நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் தடையின்றி கிடைக்கவும் மாரட்டிய மாநில அரசு மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறையை அமைக்க முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவை கமிஷனர் என். ராமசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.
இதேபோல அரசும் ரெம்டெசிவிர் மருந்துக்கு ரூ.1,100 முதல் ரூ.1,400 விலை நிர்ணயம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உற்பத்தியை அதிகாிக்கவும் மருந்து நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
நாட்டில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக வீசி வருவதால் ரெம்டிசிவர் மருந்தின் தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்படலாம் என்று தெரிகிறது.
மேலும் மருந்தை பதுக்கி வைப்பது மற்றும் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க ரெம்டிசிவிர் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் விற்பனையாளர்களின் விவரங்களைத் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.