Breaking News
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் காலமானார்

சென்னை,

தமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

தற்போது கே.வி.ஆனந்த்தின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னனி இயக்குனர்களின் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், கடந்த 1995 ஆம் ஆண்டு, ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். இவரது இயக்கத்தில் வெளியான அயன், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.