திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து
சென்னை
தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கும் அதன் தலைவர் முக ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை குஷ்பூ, நல்ல பணி தொடர வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
அண்ணா அறிவாலயமும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதேபோல பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகையால் அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்பட்டது
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக, முத்தரசன் தெரிவித்தார்.
முக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், வளமான தமிழகத்தை உருவாக்கும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அண்ணா அறிவாலயம் வந்து, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்திய, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டிய வெற்றியை தேடித் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.