அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது- முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரம்
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படும் சேவைகள், மற்றும் எவற்றுக்கெல்லாம் தடை என்பது குறித்த முழு விவரத்தை காணலாம்.
*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.
*வெளிநாடுகள், மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்க இ
பதிவு முறை தொட்ர்ந்து செயல்படுத்தப்படும். ரெயில் மற்றும் விமான நிலயங்களுக்கு சென்று வர பயணச்சீட்டுடன் அனுமதிக்கப்படும்.
*தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி
நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களை மட்டுமே
அனுமதிக்க வேண்டும்.
*மின் விணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12 மணி வரை
அனுமதிக்கபப்டும். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
*முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.
*அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட
அனுமதி வழங்கப்படும்.
*உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள்
தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை.
*மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படும்.
*உள் அரங்குகள், திறந்த வெளியில் சமுதாயம், அரசியல் விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி, கலாசாரம் நிகழ்வுகள் இதர விழாக்களுக்கு தடை
விதிக்கபப்டுகிறது.
*ஏற்கனவே அறிவித்த படி இறப்பு நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை
*மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் முடி திருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
*அனைத்து வழிபாட்டு தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. குடமுழுக்கு, மற்றும் திருவிழா நடத்த அனுமதியில்லை.
*மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையேயான அரசு தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி ஆட்டோக்கள்
ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.
*அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால்சேவை, மருத்துவமனைகள், மருத்துவ *பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ், மருந்தங்கள் செயல்பட அனுமதி உண்டு.
*அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து ஆகியற்றிற்கு அனுமதி உண்டு.
*பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
*வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவனங்கள் சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத
பணியாளர்களுடன் இயங்க அனுமதி
*முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும்
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும்
நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதி கிடையாது
*அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே
அனுமதிக்கப்படும்.
*நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
*ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.
*அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.