இந்தியாவில் இருந்து வெளியேறுகிறதா முகேஷ் அம்பானி குடும்பம்…? ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்
மும்பை
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மும்பை ஆன்டாலியாவில் வசித்து வருகிறார். இந்த வீடு 4 லட்சம் சது அடி பரப்பளவு கொண்டது. 27 தளங்களுடன், 173 மீட்டர் உயரம் கொண்ட இந்த வீடு, நில நடுக்கத்தையும் தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை வைத்துள்ள போதிலும் வருடத்தில் பாதி நேரம் மும்பையிலும், பாதி நேரம் லண்டனிலும் தங்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் மும்பையில் தன் வீட்டில் மூலம் வெடிகுண்டு உடன் நிறுத்தப்பட்ட கார் சம்பவத்திற்குப் பின்பு முகேஷ் அம்பானியின் இந்த மன மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
சமீபத்தில் முகேஷ் அம்பானி லண்டனின் ஸ்டோக் பார்க் பகுதியில் 300 ஏக்கர் பரப்பு நிலத்தை 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் கட்டிடத்தில் 49 பிரம்மாண்ட பெட்ரூம் உடன் பல வசதிகள் உள்ளது. இந்த வீட்டிற்குத் தான் தற்போது முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுகுறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ரிலையன்ஸ் மற்றும் முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த் தகவல்களை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் வசிக்கத் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை மறுத்துள்ளது. இந்த செய்தி “அடிப்படையற்றது” ரிலையன்ஸ் நிறுவன தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் அல்லது உலகில் வேறு எங்கும் இடம்பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை.
லண்டனில் ஸ்டோக் பார்க் பகுதியில் வாங்கபட்டு உள்ள இடம் கோல்ப் மற்றும் விளையாட்டு விடுதியாக கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.