பயிர்க்கடன் தள்ளுபடி; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
புதுடில்லி: ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
latest tamil news
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (நவ.,12) விசாரணைக்கு வந்தபோது, ‘5 ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.