Breaking News
மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா கொண்டாட்டம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். வழக்கமாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் 1 நாள் விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவலால் 1 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1036-வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

விழாவில் முதல் நிகழ்ச்சியாக காலை 6:30 மணிக்கு பெரிய கோவிலில் டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 7 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு புத்தாடைகளை கட்டளை தம்பிரான் சுவாமிகள் வழங்கினார்.

பின்னர் தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கோவிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் பாராயணத்தை பாடினர். முன்னதாக கோவில் வளாகத்தில் யானையில் வைத்து திருமுறை வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தமிழில் பாடிய பாராயணத்தை கேட்டு ரசித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்தனர

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.