வடகிழக்கு மாநிலங்களில் பெரும் மாற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி-”வட கிழக்கு மாநிலங்களில் கடந்த ஏழு ஆண்டு களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் தேவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 7600 கோடி ரூபாய்ஏழை மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தர, மத்திய அரசால் பிரதமரின் வீட்டு வசதி திட்டம், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது.திரிபுராவில் இந்த திட்டத்தின் கீழ், 1.47லட்சம் பயனாளிகளுக்கு 700 கோடி ரூபாய் நேற்று வழங்கப்பட்டது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்த விழாவில், பயனாளிகளுக்கான நிதியை பிரதமர் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:நாட்டின் ௭௫ம் ஆண்டு சுதந்திர தினத்துக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தர வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம். நலத் திட்டங்களுக்கான நிதியை மக்களிடம் நேரடியாக வழங்காமல், அதிகாரிகள் வழியாக ஏற்கனவே வழங்கப்பட்டது. இதனால், மக்களிடம் முழுமையான நிதி சென்றடையவில்லை. தற்போது நலத் திட்டங்களின் நிதி மக்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதில், இடைத்தரகர் என்ற பேச்சுக்கே இடமில்லை. மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், வடகிழக்கு மாநிலங்கள் மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை.
ஆனால், 2014ல் மத்தியில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின், வடகிழக்கு மாநிலங்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இந்த ஏழு ஆண்டு களில் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.உயிர் தியாகம்’ஒரே பாரதம்; சிறந்த பாரதம்’ என்ற கொள்கையுடன் மத்திய அரசு செயல்படுவதால், இப்போது நாட்டின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்களும் இணைந்துள்ளன.நாட்டின் வடகிழக்கு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பலர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்துள்ளனர்.இதை நினைவுபடுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவ., 15ம் தேதி பழங்குடியினர் கவுரவ தினமாக கடைப்பிடிக்கப்படும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.