எல்லையை கடக்க இந்திய தூதரக அதிகாரி நேரில் வந்து உதவினார்- மாணவர் பேட்டி
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு திருச்சி வந்து சேர்ந்த, துறையூரைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் உக்ரேன் எல்லையை கடக்க முயன்றபோது பாதுகாப்பு கருதி மற்ற நாட்டினரும் எங்களுடன் வந்திருந்தனர். அங்கு சோதனையின் போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டது. நாங்கள் உடனடியாக இந்திய தூதரக அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினோம். உடனே அவர் அங்கு வந்து இந்திய மாணவர்களை தனியாக அழைத்து எங்களுக்கு உதவி செய்தார். கடந்த ஒரு வாரமாக நாங்கள் பயணத்திலேயே இருந்தோம். ஒரே நேரத்தில் அனைவரும் சூப்பர் மார்க்கெட் சென்று பொருட்களை வாங்கியதால் அங்கு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாங்கள் தாயகம் திரும்ப உதவியாக இருந்த இந்திய தூதரகத்துக்கும், இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.