ஜெயலலிதா மரண விவகாரம் – அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் கடந்த 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.
இந்த நிலையில் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் பலர் தங்கள் கருத்துகளை கூறியிருந்தனர். இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கமளித்தனர்.
மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது. இதனிடையே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். முடிவில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் டாக்டர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார்.
அதில்,
* 2016-ல் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்கும் நாளுக்கு முன்னதாகவே தலைசுற்றல், மயக்கம் இருந்தது.
* தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்.
* சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு சில உடற்பயிற்சிகளை செய்யுமாறு பரிந்துரைத்தேன்.
* மருத்துவர் சிவக்குமார் அழைத்தனின் பேரில் பதவி ஏற்புக்கு முந்தைய நாள் போயஸ் தோட்டத்தில் ஜெ.சந்தித்தேன்.
*யாருடைய துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஜெயலலிதாவுக்கு இருந்தது.
*சிறுதாவூர் அல்லது உதகை சென்றூ ஓய்வெடுக்குமாறு ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தேன்.
* சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்க ஜெயலலிதாவுக்கு பரிந்துரைத்தேன்.
முதல் நாள் விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.