தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர முறை அனுமதி கட்டணம் அறிவிப்பு
சென்னை,
தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து அனுமதிகளும் ஒற்றை சாளர முறையில் பெறுவதற்கான கட்டண விவரத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் நிறுவனங்களின் முதலீட்டுக்கு ஏற்ப கட்டணத்தையும் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் இனி ஒரு நிறுவனம் அத்தனை அனுமதிகளையும் பெற தனித்தனி துறைகளை அணுக வேண்டிய அவசியமில்லை. தனித்தனியே கட்டணம் செலுத்தாமல் ஒற்றைச் சாளர முறையில் பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நிறுவனம் ரூ.10 கோடி வரை விரிவாக்கம் செய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை, ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை விரிவாக்கம் செய்தால் ரூ.2.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும், ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை விரிவாக்கம் செய்தால் ரூ.5 லட்சம் கட்டணம், ரூ.100 கோடி முதல் ரூ.300 கோடி வரை விரிவாக்கம் செய்தால் ரூ.10 லட்சம் கட்டணம், ரூ.300 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை விரிவாக்கம் செய்தால் ரூ.50 லட்சம் கட்டணம், ரூ.1,000 கோடிக்கு மேல் விரிவாக்கம் செய்தால் ரூ.20 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.