ஓபிஎஸ் பேசும் போதே.. பேப்பரை தூக்கி எறிந்து வெளியேறிய பிடிஆர்? அதிமுக பரபர குற்றச்சாட்டு.. பின்னணி
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினம் தமிழக பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் மார்ச் 19இல் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினைகளை எழுப்ப தயாராகும் எதிர்கட்சிகள் பட்ஜெட் இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. நேற்றைய தினம் தமிழக சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அதில் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் தொடர்பான பல்வேறு புள்ளி விவரங்களை குறிப்பிட்ட தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்துப் பேசினார். ஓபிஎஸ் பேசிக் கொண்டு இருக்கும் போதே, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டு பதில் அளித்து வந்தார். வெளிநடப்பு அமைச்சர் பிடிஆரின் இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தை அவர் சட்டசபையிலும் எழுப்ப முயன்றார். இருப்பினும், அதற்குச் சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், அமைச்சரின் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவமரியாதை ஓ. பன்னீர்செல்வம் பேசி முடிப்பதற்கு முன்னரே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவையில் இருந்து வெளியேறினார். ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டு இருந்த போது, அவரை அவமரியாதை செய்யு் வகையிலேயே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவையில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டியது. மேலும், அவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு உரிய மரியாதை தராததால் வெளிநடப்பு செய்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். பேப்பரை தூக்கி எறிந்து அவையில் இருந்து வெளியேறிய வெளியேறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “முதல்வர், துணை முதல்வர், நிதி அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ பன்னீர்செல்வம். அவர், நிதித்துறை சார்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்த போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முறையாகப் பதிலளிக்க முடியாமல் கையில் இருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார்” என்றார். மேலும், அமைச்சரின் இந்த செயலை கண்டித்தே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.